கீழப்பழுவூர் அருகே பஸ்கள் சிறை பிடிப்பு
கீழப்பழுவூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் அருகே வண்ணம் புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள காலனித் தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயம் உள்பட அன்றாட பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை, குடிநீர் வினியோகமும் சீராக இல்லை. மேலும் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யக்கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வண்ணம்புத்தூர் காலனித் தெரு பொதுமக்கள் திருமழபாடி-கீழப்பழுவூர் செல்லும் சாலையில் ஒன்று கூடி லால்குடியில் இருந்து கீழக்காவட்டாங்குறிச்சி வழியாக அரியலூர் செல்வதற்காக காலை 7-45 மணியளவில் காலனி அருகே வந்த பஸ்சையும், அரியலூரிலிருந்து திருமழபாடி-புதுக்கோட்டை வரை செல்லும் நகர பஸ்சையும் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்போில் கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி சரி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story