தூக்குப்போட்டு ெபண் தற்கொலை


தூக்குப்போட்டு ெபண் தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2021 1:18 AM IST (Updated: 27 April 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் தூக்குப்போட்டு பெண் தற்ெகாலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நாகலிங்கபுரம் நகரை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவர் அருப்புக்கோட்டை தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயபாரதி (25). இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஜெயபாரதி தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரத்குமாரை கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், இதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயபாரதி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story