இடி, மின்னலுடன் மழை


இடி, மின்னலுடன் மழை
x
தினத்தந்தி 27 April 2021 1:44 AM IST (Updated: 27 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரில் நேற்று மாலையில் திடீரென இடி- மின்னலுடன் மழை பெய்தது

அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் நேற்று மாலையில் திடீரென இடி- மின்னலுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால் பஸ் நிலையம், பழைய காவல் நிலையம், மற்றும் கேட்டுக்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ளம் ஓடியது. மேலும் கேட்டுக்கடை பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடந்தது. இப்பகுதியில் சித்திரை கோடை மழை பெய்துள்ளதால் தோட்ட பயிர்கள் செழிப்புடன் உள்ளது என விவசாயிகள் கூறினர்.

Next Story