வீட்டிற்குள் புகுந்த 2 பாம்புகள்


வீட்டிற்குள் புகுந்த 2 பாம்புகள்
x
தினத்தந்தி 27 April 2021 1:45 AM IST (Updated: 27 April 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருமங்கலம்
திருமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பாம்புகள்
திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமத்திலுள்ள பள்ளிகள், கோவில்கள், வீடுககளின் சுற்றுப்புறத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டின் அருகே கிருமி நாசினி தெளித்து கொண்டிருந்தபோது 2 பாம்புகள் உள்ளே செல்வதை கண்டனர். உடனே திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
பிடித்தனர்
தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஊராட்சி அலுவலர்களின் உதவியோடு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 கட்டுவிரியன் பாம்பை தேடி பிடித்தனர். பின்னர் அதை பத்திரமாக பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.

Next Story