அரியலூர் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா


அரியலூர் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 April 2021 1:49 AM IST (Updated: 27 April 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 43 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,399 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,046 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 302 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 1,094 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 685 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story