ஏ.டி.எம்.மில் எடுக்காமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் போலீசாரிடம் ஒப்படைப்பு
ஏ.டி.எம்.மில் எடுக்காமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்தில் நேற்று காலை ஒருவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வர சிறிது தாமதம் ஆனதால் அந்த நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்று நினைத்து திரும்பி சென்று விட்டார். ஆனால் சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வெளியே வந்து உள்ளது. அந்த நேரத்தில் ஏ.டி.எம்.க்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா நல்லதங்காள்பட்டியை சேர்ந்த சரண்ராஜ் மகன் பிரவீன் (வயது 23) என்பவர் அந்த பணத்தினை எடுத்து தனக்கு பின்னால் நின்ற பெரம்பலூர் 7-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த காளியப்பன் மகன் அன்பழகன் (29) என்பவரிடம் கொடுத்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறி விட்டு சென்றார். அந்த பணத்தை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் ஒப்படைத்தார். போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை எடுக்காமல் விட்டு சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் நேர்மையான முறையில் பணத்தை எடுத்து ஒப்படைத்த வாலிபர்களை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Related Tags :
Next Story