மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும்


மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 26 April 2021 8:35 PM GMT (Updated: 26 April 2021 8:35 PM GMT)

மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது

மதுரை
கலைமாமணி மோகன் மரக்கால் ஆட்ட கலைக்குழு சார்பாக கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எங்களது கலைத்தொழில் தான் முதன்மையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு தொழில் வாய்ப்பு இருக்கும் மாதத்தில் தான் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு பாதிக்கப்பட்டது. அதனால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டு கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். தற்போது ஒரு ஆண்டு கழித்து கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் எங்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்பட வழிவகை ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா காரணமாக மறுபடியும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உயிர்வாழ முடியாத பொருளாதார இழப்பிற்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே மதுரை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். 
விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக தளர்வுகள் அளிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் தளர்வு செய்ய முடியாத விட்டால் பேரிடர் நிவாரணமாகவும், கொரோனா நிவாரண நிதியாகவும் ஒவ்வொரு கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் நிதியினை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story