சிவன் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு
சிவன் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10 தேதிக்கு மேல் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிக்கதிர்கள் படும் அபூர்வ நிகழ்வு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் தனது ஒளிக் கதிர்களை லிங்கத்தின் மீது பாய்ச்சி ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி நேற்று காலை 6-05 மணிக்கு சூரியன் உதயமானது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் நேரடியாக லிங்கத் திருமேனி மீது பட்டு தங்கத்தை உருக்கி வார்த்தது போல் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக இந்த அரிய காட்சியை காண்பதற்கு பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தரிசனம் செய்தனர். இந்த அரிய நிகழ்வு இன்னும் ஓரிரு நாட்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story