கள்ளக்காதலை கண்டித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை கொல்ல முயற்சி; மனைவி, கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
பெங்களூருவில் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மனைவி, கள்ளக்காதலனை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மனைவி, கள்ளக்காதலனை போலீசார் தேடிவருகிறார்கள்.
கள்ளத்தொடர்பு
பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ரவிபிரகாஷ் மிஸ்ரா (வயது 41). இவரது மனைவி ஸ்வேதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ரவிபிரகாஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதுபோல், ஸ்வேதாவும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் உத்தவர்ஷி என்பவருடன் ஸ்வேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இதுபற்றி ரவிபிரகாசுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியிடம் உத்தவர்ஷியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல், நேற்று முன்தினம் நள்ளிரவும் ரவிபிரகாஷ், ஸ்வேதா இடையே பிரச்சினை உண்டானது.
என்ஜினீயருக்கு கத்திக்குத்து
இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த ஸ்வேதா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கணவர் ரவிபிரகாசை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து ஸ்வேதா தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய ரவிபிரகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கு சென்றும் காடுகோடி போலீசார் விசாரித்தனர். கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால் ரவிவர்மாவை ஸ்வேதா குத்திக் கொல்ல முயன்றது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக உத்தவர்ஷி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story