ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 போலீசார் சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 போலீசார் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பலர் கொரோனாவுக்கு பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்கள். தற்போது போலீசார் 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மொத்தம் 165 போலீசார் பாதிக்கப்பட்டனா். அதில் 158 பேர் குணமடைந்து உள்ளனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், கொடுமுடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை போலீசார் என 6 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு டவுன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். போலீசார் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,987 போலீசார்களில் 1,850 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story