அம்மாபேட்டை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு; கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
அம்மாபேட்டை அருகே கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுடைய மகன் மனோஜ் பிரபு (வயது 17). சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மனோஜ் பிரபு, டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுமுறை என்பதால் அவர் சென்ட்ரிங் (கம்பி கட்டும் வேலை) வேலைக்கு சென்று வந்து உள்ளார்.
மின்சாரம் தாக்கியது
இந்த நிலையில் ஊமாரெட்டியூர் பிரிவு அருகே உள்ள ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலைக்கு சென்றார். அங்கு இரும்பு கம்பியை மெஷினில் அவர் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மனோஜ் பிரபு சம்பவ இடத்திேலயே இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோஜ் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story