கோபி அருகே 2 பேரை கொன்ற வட மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு தீர்ப்பு


கோபி அருகே 2 பேரை கொன்ற வட மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2021 6:48 AM IST (Updated: 27 April 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே 2 பேரை கொன்ற வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு் தீர்ப்பு கூறியுள்ளது.

கடத்தூர்
கோபி அருகே 2 பேரை கொன்ற வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு் தீர்ப்பு கூறியுள்ளது.
கொலை
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நவீன்குமார் (வயது 26), சுரேந்திர குமார் வர்மா (28). இவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். 
அதே நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (28) என்பவரும் வேலை பார்த்தார். இவர்கள் 3 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். 
நவீன்குமார், சுரேந்திர குமார் வர்மா ஆகியோர் ரவீந்திரனிடம் அடிக்கடி கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டு் வந்துள்ளனர். அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் அங்கிருந்த இரும்பு குழாயை எடுத்து நவீன்குமார், சுரேந்திர குமார் வர்மா ஆகியோரை அடித்தார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.  பின்னர் பிணங்களை மறைத்து வைத்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கோபி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார்.
இதில், நவீன்குமார், சுரேந்திரகுமார் வர்மா ஆகியோரை கொலை செய்த குற்றத்துக்காக ரவீந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ரவீந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story