மாவட்ட செய்திகள்

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும்; அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு + "||" + pettition

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும்; அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும்; அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
டி.என்.பாளையம் 
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்த தனியார் சிலர் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் 15 ஏக்கர் நிலத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்தால் குடிப்பதற்கே எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விடும். எனவே குழாய் மூலம் தண்ணீரை எடுக்கும் பணியை நிரந்தரமாக ரத்து செய்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு கொடுக்கப்பட்டது.
2. மாநகராட்சி கமிஷனரிடம் மனு
மாநகராட்சி கமிஷனரிடம் மனு
3. சட்டி, பானைகளுடன் வந்து மனு
சட்டி, பானைகளுடன் வந்து மனு
4. அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
5. கலெக்டர் அலுவலகத்தில் மனு
கலெக்டர் அலுவலகத்தில் மனு