கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,745 ஆக உயர்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,745 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 April 2021 7:51 AM IST (Updated: 27 April 2021 7:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்தில் நாள்தோறும் 10 முதல் 20 பேர் வரையில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதத்தில் தொடக்கம் முதலே நாள்தோறும் 100 பேரை தாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2,574 பேருக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 327 பேர் சிகிச்சையில் குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 ஆயிரத்து 46 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 574 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story