மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம்


மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம்
x
தினத்தந்தி 27 April 2021 7:54 AM IST (Updated: 27 April 2021 7:55 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்தது.

கூடலூர்,

கூடலூர் அருகே மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்தது.

புலி அட்டகாசம்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் சமீப காலமாக புலி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே நடமாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அங்குள்ள மண்வயல் பகுதியில் புலி நுழைந்தது. 

தொடர்ந்து கிரீஸ் என்பவரது வீட்டில் கட்டி வைத்திருந்த காளை மாட்டை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்தது. சத்தம் கேட்டு கீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கிருந்து புலி பாய்ந்து ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உரிய இழப்பீடு

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உயிரிழந்த மாட்டை பார்வையிட்டனர். இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கால்நடை டாக்டர் பாரத் ஜோதி வரவழைக்கப்பட்டு, இறந்த மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டுயானைகள் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் கால்நடைகளை புலி அடித்துக்கொன்று வருகிறது. எனவே கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என்றனர்.


Next Story