முழு ஊரடங்கை மீறிய 10 பேர் மீது வழக்கு


முழு ஊரடங்கை மீறிய 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 April 2021 7:59 AM IST (Updated: 27 April 2021 8:00 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கை மீறிய 10 பேர் மீது வழக்கு.

ஊட்டி

கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 

முழு ஊரடங்கில் பொதுமக்கள் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், இதனை கடைபிடிக்காத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நீலகிரியில் 27 இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

முழு ஊரடங்கின்போது அவசிய தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஊட்டி உட்கோட்டத்தில் 8 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 10 பேர் மீது முழு ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story