விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் பயிர்களுடன் போராட்டம்


விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் பயிர்களுடன் போராட்டம்
x
தினத்தந்தி 27 April 2021 8:35 AM IST (Updated: 27 April 2021 8:36 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் பயிர்களுடன் போராட்டம்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே ஜீவாநகர், ஜாகிரி, வெத்தலக்காரன்பள்ளம், சொரக்கையன்கொள்ளை கிராமங்களில் மஞ்சள், நெல், பட்டுப்பூச்சி செடிகள், தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த 4  கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை சிப்காட் பணிக்கு கையகப்படுத்துவதற்காக நேற்று சிப்காட் தனிப்பிரிவு அலுவலர்கள், சர்வேயர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் உள்ள இடங்களையும், வீடுகளையும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து வாழை, பட்டுப்பூச்சி செடிகள், நெற்பயிர்கள் உள்ளிட்ட  பயிர்களுடன் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story