கொரோனா பரவல் அதிகரிப்பு, வேலூர் மத்திய ஜெயிலில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை


கொரோனா பரவல் அதிகரிப்பு, வேலூர் மத்திய ஜெயிலில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை
x
தினத்தந்தி 27 April 2021 6:58 PM IST (Updated: 27 April 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய ஜெயிலில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை

வேலூர்

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு நேற்று முன்தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், மதுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகுநிலையங்கள், சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் மத்திய ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிளை ஜெயில்களில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை சந்திக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த தடை மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும். எனவே, வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை, விசாரணை கைதிகளை சந்திக்க உறவினர்கள், வக்கீல்கள் உள்பட யாரும் வர வேண்டாம். வேலூர் பெண்கள் ஜெயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி-முருகன் சந்திப்பு வருகிற 5-ந் தேதி நடைபெற இருந்தது. அரசின் உத்தரவால் நளினி-முருகன் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயில்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறைகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு கைகளை கழுவுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story