திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் சாவு


திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 27 April 2021 8:30 PM IST (Updated: 27 April 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் இறந்தாா்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் காலனியை சேர்ந்தவர் வீராசாமி மகன் ஹரிஹரன்(வயது 30). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த பாவாடை மகள் சுவாதி(25) என்பவருக்கும் கடந்த மாதம் 24-ந் தேதி திருமணம் நடைபெற்றது. சுவாதியும், ஹரிஹரனும் மோட்டார் சைக்கிளில் பெரியசெவலையில் உள்ள வங்கிக்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். சரவணம்பாக்கம் கூட்டுரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து சுவாதி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story