கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனை


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 27 April 2021 3:31 PM GMT (Updated: 27 April 2021 3:31 PM GMT)

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். 

நேற்று 800 மூட்டை எள், 20 மூட்டை மணிலா, 80 மூட்டை உளுந்து, 40 மூட்டை கம்பு மற்றும் மக்காச்சோளம், பச்சைப்பயறு, வரகு, கேழ்வரகு என மொத்தம் 980 தானிய மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எள் அதிகபட்சமாக ரூ.8,450-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,599-க்கும், இதே எடை கொண்ட ஒரு மூட்டை மணிலா அதிகபட்சமாக ரூ.7,325-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,800-க்கும், 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக ரூ.7,19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3,519-க்கும், 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கம்பு அதிகபட்சமாக ரூ.2,539-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,336-க்கும் விலை போனது. இது தவிர மக்காச்சோளம், பச்சைப்பயிறு, வரகு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களும் விற்பனையானது. இதை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ராசிபுரம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். மொத்தம் ரூ.80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனையானது.

Next Story