அரசு பஸ்சுக்கு 1000 அபராதம்


அரசு பஸ்சுக்கு 1000 அபராதம்
x
தினத்தந்தி 27 April 2021 9:44 PM IST (Updated: 27 April 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சுக்கு 1000 அபராதம்


கோவை

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பஸ்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்து இடைவெளி விட்டு அமர்ந்து பயணிக்க வேண்டும். 

அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகளவு பயணி களை ஏற்றி வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக கோவை உக்கடம் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகரில் நேற்றுக்காலை சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த 50-ம் நெம்பர் அரசு பஸ்சில் ஏறி அதி காரிகள் சோதனையிட்டனர். அதில் வழக்கத்தை விட 10 பயணிகளை அதிகம் இருப்பது தெரியவந்தது. 

உடனே அந்த பஸ்சுக்கு ரூ.1,000 அபரா தம் விதித்து அதற்கான ரசீதை கண்டக்டரிடம் அதிகாரி ஒருவர் கொடுத்தார். 

ஆனால் அந்த ரசீதை வாங்காமல் கண்டக்டர் வாக்குவா தம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அபராதத்தொகை செலுத்தப்பட்டது.

Next Story