தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெயபாரதி(வயது 22). இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஜெயபாரதி மோட்டார் சைக்கிளில் புக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தியாகதுருகம் பானையங்கால் சாலை விளக்கூர் ஏரிக்கரையில் வந்தபோது எதிரே தியாகதுருகம் நாகம்மை தெருவை சேர்ந்த பாலாஜி(30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஜெயபாரதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபாரதி மற்றும் பாலாஜி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெயபாரதி பரிதாபமாக இறந்தார். பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story