காட்பாடியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காட்பாடியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2021 10:07 PM IST (Updated: 27 April 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி

காட்பாடி வழியாக செல்லும் ெரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத் சத்பதிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரும் காட்பாடி ெரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அந்த வழியாக வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். 

இதில் 40 சிறிய, சிறிய மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருக்கைகளின் அடியே கிடந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

Next Story