உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூசாரி வீட்டில் 2 லட்சம் நகை பணம் கொள்ளை


உளுந்தூர்பேட்டை அருகே  கோவில் பூசாரி வீட்டில் 2 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 April 2021 10:13 PM IST (Updated: 27 April 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூசாரி வீட்டில் 2 லட்சம் நகை பணம் கொள்ளை

விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகடாட்சம்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று சிவகடாட்சம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்துக்கு சென்றார். 

பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து சிவகடாட்சம் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story