காங்கேயம், வெள்ளகோவிலில் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.


காங்கேயம், வெள்ளகோவிலில் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.
x

காங்கேயம், வெள்ளகோவிலில் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.

காங்கேயம்
காங்கேயம், வெள்ளகோவிலில் 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.
கொரோனா தொற்று
காங்கேயம் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் காங்கேயம் நகரம், அக்ரகார வீதியை சேர்ந்த 62 வயது ஆண், கார்த்திகை நகரை சேர்ந்த 51 வயது ஆண், 49 வயது பெண், 20 வயது பெண், குறிஞ்சி நகரை சேர்ந்த 55 வயது ஆண், எல்.ஜி.ஜி.எஸ்.காலனியை சேர்ந்த 36 வயது பெண் ஆகிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
 இதில் சிலர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், பெருந்துறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், சிலர் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் காங்கேயம் நகராட்சி மற்றும் சுகாதார துறையினர் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வெள்ளகோவில் 
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கடந்த 21-ந்தேதி அன்று 205 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் 4 ஆண்கள், 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 22-ந்தேதி அன்று 145 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 9 ஆண்கள், 4 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஈரோடு மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 ஆண்களுக்கும், 2 பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 ஆக மொத்தம் 16 ஆண்களுக்கும் 8 பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது விருப்பத்திற்கேற்ப வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் திருப்பூர், கோவை, கரூர், தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு கூட்டம் 
காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுகாலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உணவகங்கள், பேக்கரி, டீ கடை, மளிகை கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர். 
மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் கடையை திறந்து மூடவேண்டும். இதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் காங்கேயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வணிக நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story