ஸ்ரீவைகுண்டம் அருகே விபத்து 3 பேர் படுகாயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
திருச்செந்தூர் வடக்கு ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்தவர் சேவியர். இவரது மகன் சாந்தாகுருஸ் (வயது 51), இவர் ஆத்தூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தெற்கு ஆத்தூர் கீழதெருவை சேர்ந்தவர் அமீர் சுல்தான் (66) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இவரை சாந்தாகுரூஸ் ஆட்டோவில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். ஆட்டோவில் ஆமீர் சுல்தானின் அண்ணன் மகன் ரிஸ்வானும் உடன் சென்றார். மூவரும் ஆத்தூரில் இருந்து ஆட்டோவில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே, நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சென்றபோது, எதிரே நெல்லை டவுண் தர்மராஜ் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்சிங் (22) ஓட்டி வந்த லோடு வேன், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த சாந்தாகுரூஸ், அமீர்சுல்தான், ரிஸ்வான் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story