சிதம்பரத்தில் போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி
சிதம்பரத்தில் கொரோனாவுக்கு போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி பெரிய தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 44). இவர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
தற்போது ராஜ்குமார் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவா் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பலி
இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ராஜ்குமாரை தனிவார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story