தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு கொரோனா
புதிதாக 179 பேருக்கு கொரோனா
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
179பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
1,078 ஆக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,044 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 145 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 179 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story