மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 April 2021 11:25 PM IST (Updated: 27 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கின் அருகில் ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் நின்றுகொண்டு அந்த வழியாக வருவோரை மிரட்டி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மடக்கி பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில் சின்னக்கடை மீன்காரத்தெருவை சேர்ந்த கமருதீன் மகன் அப்துல்அஜீஸ் (வயது31) என்பது தெரிந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story