‘கிரெடாய்’ அமைப்பின் தலைவராக இஷா சுரேஷ் கிருஷ்ணா பொறுப்பேற்பு


‘கிரெடாய்’ அமைப்பின் தலைவராக இஷா சுரேஷ் கிருஷ்ணா பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 27 April 2021 11:59 PM IST (Updated: 27 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

இந்தியன் ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு (கிரெடாய்) 21 மாநிலங்களில் உள்ள 217 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இதில் சுமார் 13 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த ‘கிரெடாய்’ அமைப்பு 5 முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஈரோட்டில் 294 செயல் வீரர்களுடன் இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.

இந்த தமிழ்நாட்டு பிரிவு ‘கிரெடாய்’ அமைப்பின் தலைவராக இஷா சுரேஷ் கிருஷ்ணா பொறுப்பேற்று இருக்கிறார். இவர் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இந்த பொறுப்பை வகிக்க உள்ளார். அந்தவகையில் இவர் 6-வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவர் மட்டுமல்லாது, அவரை சேர்ந்த குழுவினரும் பொறுப்பேற்று இருக்கின்றனர். இதற்கான நிகழ்ச்சி ஆன்-லைன் வாயிலாக நடந்தது. இந்த விழாவில் ‘கிரெடாய்’ தேசிய தலைவர் ஹர்ஷவர்தன் பட்டோடியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ‘கிரெடாய்’ தமிழ்நாட்டு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், "கட்டுமானமும், மனைகளின் வளர்ச்சியும் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.


Next Story