சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும்- முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு


சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும்- முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 28 April 2021 12:18 AM IST (Updated: 28 April 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருச்சி, 
வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் மாநில இளைஞரணி தலைவர் பழனிசாமி தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பால் எங்கள் சலூன் கடைகளை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆதலால் அரசு அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து நேர கட்டுப்பாடுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story