ரெயில்வே பாதுகாப்பு படை, போலீசார் சார்பில் பயணிகள், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்
ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் சார்பில் பயணிகள், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் ரெயில் பயணிகள், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், ரெயில் நிலைய மேலாளர் விருதாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கி ரெயில் பயணிகள், ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story