திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளும் மொத்தம் 241 சுற்றுகளாக எண்ணப்படும்; கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளும் மொத்தம் 241 சுற்றுகளாக எண்ணப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளும் மொத்தம் 241 சுற்றுகளாக எண்ணப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்து உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தலா 14 மேஜைகள் போட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் எத்தனை சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்ற விவரத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
மொத்தம் 241 சுற்றுகள்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வாக்குகள் 30 சுற்றுகளாகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 32, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்குகள் 28, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 27, திருவெறும்பூர் 30, லால்குடி 22,மண்ணச்சநல்லூர் 25, முசிறி 24, துறையூர் (தனி) 23 என மொத்தம் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகளாக எண்ணப்ட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story