மேலும் 248 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,239 ஆக உயர்ந்துள்ளது. 17,622 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,338 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 239 பேர் பலியாகி உள்ளனர். நேற்று விருதுநகரில் காந்திநகர், கூரைக்குண்டு, அம்பேத்கர் தெரு, காந்திபுரம் தெரு, மணி நகரம், திருவள்ளுவர் நகர், என்.ஜி.ஓ. காலனி, ஆவலப்ப சாமி கோவில் தெரு, கலைஞர் நகர் ரோசல்பட்டி பாண்டியன் நகர் மேற்கு பாண்டியன் காலனி, அவ்வையார்தெரு, ெரயில்வே காலனி, சூலக்கரை மேடு, விருதுநகர் ெரயில்வே பீடர் ரோடு, லட்சுமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர சிவகாசி சித்துராஜபுரம் ரிசர்வ்லைன், காக்கிவாடன்பட்டி, செங்கமலப்பட்டி, ஆனைக்குட்டம், காரியாபட்டி, பாண்டியன் நகர், வி.நாங்கூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ஆலங்குளம், ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story