பிளஸ்-2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


பிளஸ்-2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 27 April 2021 6:57 PM GMT (Updated: 27 April 2021 7:36 PM GMT)

பிளஸ்-2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வால்பாறை,

வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் கடந்த 23-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

 ஆனால் கொரோனா பரவல் அதிரித்து வருவதால், மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்து தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. 

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான வினாத்தாள்கள் வால்பாறைக்கு வந்து விட்டன. இந்த வினாத்தாள்கள் அனைத்தும் வால்பாறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருக்கும் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story