கரூரில் கோடை மழை
கரூரில் கோடை மழை பெய்தது.
கரூர்
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். வழக்கம்போல நேற்றும் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மதியம் சுமார் 12.45 மணியவில் வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது கரூர், சுங்ககேட், ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்தது. இந்த திடீர் மழையின் காரணமாக கரூர் மனோகரா கார்னர் பகுதி, ஐந்து ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் நேற்று கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story