வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர்
தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட உள்ளன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளத்தில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் போலீசார் என சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story