மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 28 April 2021 12:43 AM IST (Updated: 28 April 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் நுழைவுவாயில் கும்பாபிஷேகம் திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் நுழைவுவாயிலை சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் திறந்துவைத்தார்.நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக கணபதி ஹோமம் யாகசாலை, கோமாதா பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் நுழைவுவாயிலில் உள்ள கலசத்திற்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு தோரணவாயில் வளாகம் சுற்றியுள்ள பகுதியில் மரக்கன்று நடப்பட்டது.  இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை சேர்மன் வேலுச்சாமி, முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் பெருநாழி போஸ், பாண்டியன் சரஸ்வதி கல்லூரி தாளாளர் வரதராஜன், தமிழ் ஆசிரியர் லட்சுமணன், ஒப்பந்ததாரர் வேலு மாணிக்கம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சுப்பிரமணியன், தனசேகரன், கோவிந்தன், ராமர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராமலிங்கம், ஓ.கரிசல்குளம் பாண்டி உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை  மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story