அய்யம்பேட்டை அருகே கஞ்சா விற்ற தந்தை மகன் உள்பட 3 பேர் கைது
அய்யம்பேட்டை அருகே கஞ்சா விற்ற தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை:-
அய்யம்பேட்டை அருகே கஞ்சா விற்ற தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் நெடுந்தெரு ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வழுத்தூரை சேர்ந்த முனியாண்டி (வயது55), அவருடைய மகன் மணிகண்டன் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
அதேபோல பட்டித்தோப்பு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழைய மாத்தூரை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story