பருவம் தவறி பெய்த மழையால் முந்திரி விளைச்சல் பாதிப்பு


பருவம் தவறி பெய்த மழையால் முந்திரி விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 27 April 2021 7:29 PM GMT (Updated: 27 April 2021 7:29 PM GMT)

கந்தர்வகோட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் முந்திரி விளைச்சல் பாதிக்கப்பட்டு்ள்ளது.

கந்தர்வகோட்டை,ஏப்.28-
கந்தர்வகோட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் முந்திரி விளைச்சல் பாதிக்கப்பட்டு்ள்ளது.
முந்திரி சாகுபடி
கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மங்கனூர், கோமாபுரம், விராலிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், வீரடிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்தது மட்டுமின்றி கருகிவிட்டது. இதனால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் வேதனை
 இப்பகுதியில் இருந்து முந்திரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காய்ப்பு திறன் குறைந்ததால் வெளிநாடுகளுக்கு முந்திரி கொட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story