நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி; என்ஜினில் சிக்கி 18 கி.மீ. தூரம் பயணித்த தலை


நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி; என்ஜினில் சிக்கி 18 கி.மீ. தூரம் பயணித்த தலை
x
தினத்தந்தி 28 April 2021 1:03 AM IST (Updated: 28 April 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். அவருடைய தலை, என்ஜினில் சிக்கி 18 கி.மீ. தூரம் பயணித்து திண்டுக்கல்லுக்கு வந்தது.

திண்டுக்கல்:
கொடைரோடு அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். அவருடைய தலை, என்ஜினில் சிக்கி 18 கி.மீ. தூரம் பயணித்து திண்டுக்கல்லுக்கு வந்தது. 
என்ஜினில் மனித தலை 
நெல்லையில் இருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் ஒரு மனித தலை சிக்கி இருந்ததை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சையதுகுலாம்தஸ்தகீர் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த தலையை கைப்பற்றினர்.
மேலும் அது, ரெயிலில் அடிபட்டு இறந்த ஒருவருடைய தலையாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து அந்த தலைக்குரிய உடலை தேடும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர். இதற்காக திண்டுக்கல் முதல் கொடைரோடு வரை ரெயில் தண்டவாளத்தில் சோதனையிட்டனர். அப்போது கொடைரோடு அருகே தலையில்லாத ஒரு ஆணின் உடல் தனியாக கிடந்தது.
18 கி.மீ. தூரம் 
அதை கைப்பற்றி விசாரித்த போது, ரெயில் என்ஜினில் சிக்கிய தலைக்குரிய உடல் என்பது தெரியவந்தது. 
ரெயிலில் அடிபட்டதும் உடல் அங்கேயே கிடக்க, தலை மட்டும் என்ஜினில் சிக்கி சுமார் 18 கி.மீ. தூரம் பயணித்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளது. மேலும் இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்று தெரிகிறது. கருப்பு நிறத்தில் பனியன், பிரவுன் நிறத்தில் கோடு போட்ட கால்சட்டை அணிந்து இருந்தார்.
எனினும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் முதியவரின் உடல், தலையை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story