கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்ட தெருவில் தடுப்புகள் அமைப்பு


கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்ட தெருவில் தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 28 April 2021 1:14 AM IST (Updated: 28 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

விளந்தையில் தந்தை- மகள் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்புகள் அமைக்கப்பட்டது.

ஆண்டிமடம்:

கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை பாப்பாத்தி கொள்ளை தெருவை சேர்ந்த தந்தை, மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த தெருவுக்கு வெளியில் இருந்து வரும் பொதுமக்கள் செல்ல முடியாதவாறும், அந்த தெருவில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியில் செல்லாதவாறும் தெருவின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
தடுப்பூசி
மேலும் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறார்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், தெருவில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றும் கூறினார். 

Next Story