நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லக்கோரி ஆர்ப்பாட்டம்


நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2021 1:14 AM IST (Updated: 28 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதுகாப்பற்ற நிலையில் வெட்டவெளியிலும், சாலையோரங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. திடீரென கோடை மழை பெய்தால் நெல்மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விடும். ஆகவே, அந்த நெல்மணிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருமானூர் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story