பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 April 2021 7:44 PM GMT (Updated: 27 April 2021 7:44 PM GMT)

பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆகவே பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், அரசு ஊழியர் குடியிருப்பு, கே.கே.நகர், மூன்று ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, உழவர்சந்தை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், அரியலூர் மெயின்ரோடு, மின்நகர் மற்றும் கிராமிய பகுதிகளான மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், சிட்கோ தொழிற்பேட்டை, இந்திராநகர், செங்குணம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின்வினியோகம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story