மாவட்ட செய்திகள்

கரும்புச்சாறு, வெள்ளரி பிஞ்சு, இளநீர், நுங்கு விற்பனை அமோகம் + "||" + Sugarcane juice, cucumber pinch sell amokam

கரும்புச்சாறு, வெள்ளரி பிஞ்சு, இளநீர், நுங்கு விற்பனை அமோகம்

கரும்புச்சாறு, வெள்ளரி பிஞ்சு, இளநீர், நுங்கு விற்பனை அமோகம்
ஜெயங்கொண்டம் பகுதியில் கரும்புச்சாறு, வெள்ளரி பிஞ்சு, இளநீர், நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம்:

சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்குநாள் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. ெவயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கரும்புச்சாறு, பழச்சாறு, குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவைகளை குடித்து வருகின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் சாலையோரங்களில் விற்கப்படும் நுங்கு, வெள்ளரிப்பிஞ்சுகளையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் வீட்டிற்கும் வாங்கிச்செல்கின்றனர்.
விற்பனை அமோகம்
இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் கரும்புச்சாறு, பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கி செல்கின்றனர்.
கிராமப்புறங்களில் 20 ரூபாய்க்கு 12 நுங்குகளும், நகர பகுதிகளில் 20 ரூபாய்க்கு 10 நுங்குகளும் விற்கப்படுகின்றன. ஒரு வெள்ளரிப்பிஞ்சு 10 முதல் 20 ரூபாய்க்கும், கரும்புச்சாறு 20 ரூபாய்க்கும், ஒரு இளநீர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திசையன்விளையில் நுங்கு விற்பனை அமோகம்
திசையன்விளையில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
2. நுங்கு விற்பனை அமோகம்
திண்டுக்கல்லில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்தது.
3. மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்