புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 April 2021 1:19 AM IST (Updated: 28 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 540 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 ஆயிரத்து 412 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது பெரம்பலூர், திருச்சி, கோவை, அரியலூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 104 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 31,998 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story