வால்பாறையில் நேற்று கனமழை பெய்தது
வால்பாறையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேயிலை செடிகள் வறண்டன
வால்பாறை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வறட்சி தொடங்கியது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தேயிலை செடிகள் வறண்டு கருக தொடங்கின.
இதனால் தேயிலை செடிகளுக்கு தெளிப்பான்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் தெளித்து வந்தனர். பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
இந்த சூழ்நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் வால்பாறை நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பல இடங்களில் அவ்வப்போது பலத்த இடியுடன் கூடிய கனமழையும், லேசான மழையும் பெய்து வருகிறது. இதனால் கடுமையான வெயிலில் இருந்து வால்பாறை பகுதி மக்கள் மீண்டனர். தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை
இந்த நிலையில் வால்பாறையில் நேற்று மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றன. பொதுமக்கள் குடை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது.
இந்த மழை காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி படகு இல்லத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வழிகிறது. வால்பாறையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், வால்பாறை பகுதியில் அவ்வபோது மதிய வேலையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து தேயிலை தோட்டங்களில் இருக்கும் தேயிலை செடிகளிலும் கொழுந்து தேயிலை இலைகள் துளிர் விட்டு வளர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றனர்.
Related Tags :
Next Story