தையல் எந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர் நலத்துறையில் தையல் எந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்
மதுரை
தமிழ்நாடு தொழிலாளர் துறை சார்பில், தொழிலாளர் நல வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தின் கீழ் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து, மதுரை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர்(கூடுதல் பொறுப்பு) காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகிய அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு புதிய நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற தையல்பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் எந்திரம் வாங்க உதவித்தொகை வழங்கப்படும். தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு உதவித்தொகை ஆகியன வழங்கப்படவுள்ளது.
எனவே இந்த நலத்திட்டங்களில் பயனடைய விரும்பும் தொழிலாளர்கள் தொழிலாளர் நலவாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தொழிலாளர்களின் மாத சம்பளம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story