மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பேரையூர்
பேரையூர் அருகே உள்ள வண்டாரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் கிராம உதவியாளர் ஜெகதீஷ் ஆகியோர் திருட்டு மணல் தடுப்பு சம்பந்தமாக மெய்யனூத்தம்பட்டி புளியமர ஓடை பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது அணைக்கரைபட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்ற அன்வர் மற்றும் 2 பேர் அங்குள்ள ஓடையில் லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை கண்டவுடன் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனே அங்கிருந்த 2 லாரிகள் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சாப்டூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story