ரூ.58 லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகள் மீறல்; ரூ.58 லட்சம் அபராதம் வசூல்
மதுரை
கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொதுமக்களிடம் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, இருப்பிடங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமான சூழ்நிலையுடன் பராமரிப்பது ஆகியவை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் கொரோனா தொற்று தடுப்பிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய 28,659 பேர் மீது அபராதமாக தலா 200 ரூபாய் விதிக்கப்பட்டு, அவர்கள் மூலம் 57,27,800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது தவிர பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாக 221 வழக்குகள் பதியப்பட்டு தலா 500 ரூபாய் வீதம் 1,10,500 ரூபாய் அபராதம் பெறப்பட்டது.
Related Tags :
Next Story